கான்ஸ்டிடியூசன் ஹில், நியூ சவுத் வேல்ஸ்
கான்ஸ்டிடியூசன் ஹில் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் | |||||||||||||
மக்கள் தொகை: | 3,966 | ||||||||||||
அமைப்பு: | 2007 | ||||||||||||
அஞ்சல் குறியீடு: | 2145 | ||||||||||||
உள்ளூராட்சிகள்: | பரமட்டா | ||||||||||||
மாநில மாவட்டம்: | செவன் ஹில்ஸ் | ||||||||||||
நடுவண் தொகுதி: | பரமட்டா | ||||||||||||
|
கான்ஸ்டிடியூசன் ஹில் (Constitution Hill) (அரசியலமைப்பு மலை) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது சிட்னி நகரிலிருந்து 28 கிலோமீட்டர் மேற்காக பரந்த மேற்கு சிட்னி பிராந்தியத்தில் பரமட்டா நகர உள்ளாட்சி பகுதியில் அமைந்துள்ளது. பரமட்டா நகரை நோக்கி பார்க்கும் இந்த மலையிலிருந்து சிட்னி நகரின் தொடுவானத்தை பார்க்க இயலும்.
வரலாறு
[தொகு]1804 ஆம் வருடத்தில் காஸில் ஹில் குற்றவாளிகள் கிளர்ச்சி இடம்பெற்ற இடங்களில் கான்ஸ்டிடியூசன் ஹில்லும் ஒன்றாகும். இந்த புறநகர்ப் பகுதி ஆரம்பத்தில் வென்ற்வேத்வில் புறநகர்ப் பகுதியின் ஒரு அங்கமாக இருந்தது. பின்னர் 19 ஜனவரி 2007 இலிருந்து இது ஒரு தனித்த புறநகர்ப் பகுதியாக நியூ சவுத் வேல்ஸின் புவியியல் பெயர்கள் வாரியத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது.[1]
புள்ளிவிவரங்கள்
[தொகு]2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கான்ஸ்டிடியூசன் ஹில்லில் 3,966 குடியிருப்பாளர்கள் இருந்தனர். இவர்களில் 61.0% ஆனோர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மேலும் இந்தியா 3.9%, சீனா 3.8%, லெபனான் 3.2% ஆகியவை பொதுவான பிறந்த நாடுகளாகும். அதேவேளை இவர்களில் 55.1% பேர் மட்டுமே வீட்டில் ஆங்கிலம் பேசுகிறார்கள். வீட்டில் பேசப்படும் பிற மொழிகளாக அரபு 7.7%, கான்டோனீஸ் 3.4% மற்றும் மாண்டரின் 3.2% ஆகியவை உள்ளன. மதத்திற்கான மிகவும் பொதுவான பதில்களாக கத்தோலிக்க மதம் 27.8%, மதம் இல்லை 19.9% மற்றும் ஆங்கிலிகன் 11.1% என்பன குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த பகுதி வாழ் மக்களின் சராசரி வாராந்திர வீட்டு வருமானம் $1,443 ஆகும். இது தேசிய சராசரியான $1,486 ஐ விட சற்று குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Constitution Hill - Extract". www.gnb.nsw.gov.au. Geographical Names Board of New South Wales. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2016 Census QuickStats: Constitution Hill". quickstats.censusdata.abs.gov.au (in ஆங்கிலம்). Australian Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.